Editorial / 2019 மே 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேசத்தில், எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில், 3 கட்டமாக 21 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு, தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தூர் தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததோடு, மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவை அதிகரிக்கச் செய்வதற்காக, பிரத்தியேகமாக அலைபேசிச் செயலியொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்தச் செயலியை, வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்வதன் மூலம், வாக்குப்பதிவு நாளை, அந்தச் செயலி நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
அத்தோடு, சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த ஜோடி என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர, வாக்களித்துவிட்டு, கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்கு, ஹோட்டல்களில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி, திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்பவர்களுக்கு பாப்கார்ன் பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு, இலவச பஸ் சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago