Ilango Bharathy / 2023 மே 28 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாத்துகளுக்கு உதவியதால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கேசி ரிவாரா என்ற 41 வயதான நபர் காரில் சென்று கொண்டிருந்த போது வாத்துகள் கூட்டமொன்று இருப்பதைப் பார்த்துள்ளார்.
இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, மற்ற வாகனங்களையும் நிறுத்தி, வாத்துகள் சாலையை கடக்க உதவினார். வாத்துகள் சாலையை கடந்து மறுபுறம் சென்றதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், கைகளை தட்டி கேசி ரிவாராவுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

அப்போது அவ்வழியாக 17 வயது சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் ரிவாரா மீது மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவம் நடந்த இடத்தில் மலர்கள் மற்றும் றப்பர் வாத்துகளை வைத்து ரிவாராவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago