Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயிற்சிப் பறப்பொன்றிலிருந்த பாகிஸ்தானிய இராணுவ விமானமொன்று அந்நாட்டின் படைத்தள நகரமொன்றான ராவல்பின்டிக்கருகே வீடுகளில் வீழ்ந்ததில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (30) அதிகாலைக்கு முன்பதாக இடம்பெற்றநிலையில், ராவல்பின்டியின் புறநகர்களிலுள்ள மொரா கலு கிராமத்தின் மீதான இரவு வானத்தில் பாரிய தீப்பிழம்பொன்றைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் வசிப்பிட இடத்தை விமானத்தின் சிதைவுகள், விசாரணை ஆதாரங்களுக்காக படைகளும், பொலிஸாரும் சுற்றிவளைத்திருந்தனர்.
அந்தவகையில், 13 பொதுமக்கள், ஐந்து விமானப் பணியாளர்கள் உட்பட்ட 18 சடலங்களை தாங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக மீட்புச் சேவையின் பேச்சாளர் ஃபாரூக் பட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்துக்கருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக ஃபாரூக் பட் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து சடலங்களும் மோசமாக எரிந்துள்ளதாகவும், அடையாலங் காண்பதற்காக மரபணுச் சோதனை தேவை என ஃபாரூல் பட் தெரிவித்துள்ளார்.
வழமையான பயிற்சிப் பயணமொன்றிலிருந்தபோது இராணுவ விமானமானது வீழ்ந்ததாகத் தெரிவித்த இராணுவம், அதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கவில்லை
6 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
25 minute ago