2025 நவம்பர் 05, புதன்கிழமை

விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங் விமான நிலைய வாளகத்தில் நடைபெற்று வந்த போராட்டம், தணிந்துள்ள நிலையில், விமான சேவைகள் தொடங்கியுள்ளன.

ஹொங் கொங் கைதிகள் பரிமாற்றச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, கடந்த 10 வாரங்களாக, கடுமையான போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள், பொலிஸாரின் தடையை மீறி, அங்கிருந்து வெளியேறி, சாலையொன்றுக்குள் நுழைந்தனர். இதனால், ​பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே, கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதேபோல் ஹொங் கொங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும், தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக, கடந்த இரண்டு நாள்களாக, விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்புப் பிரிவுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது.

எனினும், இன்று (14) காலை, அதிகளவான போராட்டக்காரர்கள், விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வழக்கமான விமானங்கள் அனைத்தும் எந்தத் தடங்கலும் இன்றி புறப்பட்டுச் சென்றன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

எனினும், சில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X