2025 மே 19, திங்கட்கிழமை

விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் விளம்பரங்களில் பெண்கள் நடிக்க ஈரான் அரசு தடை விதித்துள்ளதுஃ

- ஐஸ்கிரீம் விளம்பரத்தில் பெண் ஒருவர் ஹிஜாபை தளர்த்திய நிலையில் நடித்திருந்தார். அது மத ரீதியிலான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்ததாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

 பெண்களின் மதிப்புகளை அவமதிக்கும் வகையில் இது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை ஹிஜாப் விவகாரத்தை சார்ந்து இருப்பதாகவும் கருத்துகள் அங்கு நிலவுகிறதாம்.

கடந்த 1979 முதல் ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இருந்தும் இதற்கு பெண்கள் சிலர் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X