Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 22 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடந்த 19 ஆம் திகதி இரவு 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு அயலவர்கள் தெரியப்படுத்தியிருந்த நிலையில் , அங்கு சென்ற பொலிஸார் வீட்டில் மூவரது சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் , பின்னர் அச்சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ”60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரழந்துள்ளனர் எனவும், அவர்களது உடலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன எனவும், உயிரிழந்த மூவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .