2025 மே 19, திங்கட்கிழமை

வீதியில் சென்ற வாகனங்களுக்குத் தீ வைப்பு : 19 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
சோமாலியாவில்  வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்தி பயங்கரவாதிகள்  தீ வைத்துள்ள சம்பவம் உலகளவில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
சோமாலியாவில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் அந்நாட்டில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
 
இதன் காரணமாக  குறித்த பயங்கரவாத  அமைப்பைச் சேர்ந்தவர்கள்  அவ்வப் போது பொலிஸார் இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக்  குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் உள்ள ஹிரான் மாகாணத்தில் பெலெட்வேய்ன் மற்றும் மாக்சாஸ் நகரங்களுக்கு இடையே உள்ள வீதியில் பயணித்த கார், லொறி உட்பட 8 வாகனங்களை  பயங்கர வாதிகள்  தீ வைத்து எரித்துவிட்டு  தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இக் கோர சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X