2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிருலப்பனையில் 21 இந்திய பிரஜைகள் திடீர் கைது

Freelancer   / 2025 ஜூலை 18 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள் இன்று (18) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான பின்னரும் கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்து இணையவழி சூதாட்ட மோசடியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்தக் குழுவைக் கண்டறிந்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X