2025 நவம்பர் 05, புதன்கிழமை

வெப்பநிலை அதிகரித்தமையால் 10 பேர் பலியாகினர்

Editorial   / 2019 மே 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக, 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 340 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாநிலத்தில் 110 பாகை ஃபரனைட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலப்பகுதியில், 113 பாகை ஃபரனைட் முதல் 118.4 பாகை ஃபரனைட் வரையில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதேபோல் ராயலசீமாவில் அனல் காற்று அதிகமாக வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X