Freelancer / 2024 ஜூலை 01 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறியதால், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அவருக்கு பதில் மிச்சல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளனர்.
விரைவில் நடக்க உள்ள இந்த கட்சிகளின் மாநாட்டில், இவர்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது.
இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். வயது முதிர்வும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பராக் ஒபாமா, ஜோ பைடனுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
'விவாதத்தில், பைடன் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்காக செய்த பணிகளை நினைத்து பார்க்க வேண்டும்' என அதில் அவர் கூறியுள்ளார்.S
19 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago