Editorial / 2019 மே 20 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் என, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு, ஜாலிபுதூர், டி.அய்யம்பட்டி என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில், நேற்று (19) மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, என தருமபுரி, கிருஷ்ணகிரி சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேரந்த 566 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மறுவாக்குப்பதிவு மையங்களை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) ஆட்சி, இன்னும் 2 ஆண்டுகள் தொடரும் என்று நம்பிக்கை வெளியிட்டார். மத்தியில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், மறு வாக்குப்பதிவுக்கு, தி.மு.கவின் தோல்வி பயமே காரணம் என்றும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago