2025 நவம்பர் 05, புதன்கிழமை

’ஸ்டாலின் முதலமைச்சர் கனவு பலிக்காது’

Editorial   / 2019 மே 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகுவது குறித்து கனவு காண்பது பலிக்காது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், அ.தி.மு.க வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில், நேற்று முனத்தினம் (07), ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அ.தி.மு.க உறுப்பினர்களே பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில், கல்வி துறையில் மேற்கொள்ளப்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக இன்று தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்வேறு பணியிடங்களுக்குத் ​தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X