2026 ஜனவரி 28, புதன்கிழமை

ஹசீனா மீது 21இல் குற்றச்சாட்டுகள் பதியப்படும்

S.Renuka   / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான தேசத் துரோக வழக்கில் எதிர்வரும் 21ஆம் திகதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

நம் அண்டை நாடான பங்களாதேஷில் இடஒதுக்கீடு தொடர்பாக, 2024இல் மாணவர் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை இராஜினாமா செய்ததுடன், வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.


இதைத்தொடர்ந்து, மாணவர் போராட்டத்தின் போது, நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில், 2024 டிசெம்பரில், 'ஜாய் பங்களா பிரிகேட்' என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்பட்ட ஒன்லைன் கூட்டத்தில் ஷேக் ஹசீனா பங்கேற்றார்.

இதில், முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசை கவிழ்க்கவும், உள்நாட்டு போரை துாண்டி விட்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர்வரும் 21ஆம் திகதி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X