2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

ஹனியே படுகொலைக்கு பழி தீர்க்கப் போகும் ஈரான்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிக்கு பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதுவரை 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஈரான் மற்றும் ஹமாஸ் இடையே நேரடி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிக்குப் பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.

அவர், 'இஸ்மாயில் ஹனியே எங்களுடைய விருந்தாளி. அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இஸ்ரேலை பழிவாங்குவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கருதுகிறோம்” என்றார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்புக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இஸ்ரேல் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .