Freelancer / 2024 ஜூன் 09 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் கடத்திச் சென்ற பணய கைதிகள் 4 பேரை இஸ்ரேல் நேற்று மீட்டுள்ள நிலையில், இந்த மீட்பு நடவடிக்கையில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை மூண்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 94 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதல் நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றதுடன், 250 பிணைக் கைதிகளை கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், 8 மாதங்களாக நீடிக்கும் இந்த போரில் 36,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்தின் போது, 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 130க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், 4 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த தாக்குதலிலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 94 பேர் கொல்லப்பட்டனர்.
அதேசமயம், இந்h மீட்பு நடவடிக்கையின் போது, நோவா அர்காமனி (25), அல்மோக் மேயர் ஜான் (21), ஆண்ட்ரே கோஸ்லோவ் (27), ஸ்லோமி ஜீவ் (40) ஆகிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல் ஒரு வீர நடவடிக்கை என்றும் பிணைக் கைதிகளை மீட்கும் வரை சண்டை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
9 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
55 minute ago