2025 ஜனவரி 25, சனிக்கிழமை

ஹாலிவுட் மலைகளில், சன்செட் தீ வேகமாக பரவி வருகிறது

Editorial   / 2025 ஜனவரி 09 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

லோஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத்துறையின் கூற்றுப்படி, சன்செட் தீ தற்போது 20 ஏக்கர் வரை பரவியுள்ளது. மேலும் அது ரன்யான் கன்யோன் முதல் வாட்டலஸ் பார்க் இடையேயான பகுதியை எரித்து நாசமாக்கியுள்ளது. ஹாலிவுட் அடையாளத்தை தவிர்த்து, ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் சன்செட் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளது. அதேபோல் ஹாலிவுட்டன் பிற அடையாளங்களான, ஹாலிவுட் பவுல் வெளிப்புற ஆம்பிதியேட்டர் மற்றும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் போன்றவையும் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளன.

புதிய தீ பரவல் காரணமாக லாரல் கன்யான் பவுல்வார்ட் முதல் முல்ஹேல்லண்ட்-ன் சில பகுதிகளில் கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது பிரபலங்களின் குடியிருப்புக்கு பெயர் பெற்ற ஹாலிவுட் பவுல்வர்ட் தெற்கே வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X