Freelancer / 2026 மார்ச் 27 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் கடற்படைத் தளபதி அலிரேசா, இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தார்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இராணுவம் மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்கிரி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். சர்வதேச கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய குற்றத்துக்காக அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின.
இதில், அலிரேசா டாங்கிரி உயிரிழந்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை முடக்கியதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், அவரது உயிரிழப்பை ஈரான் இராணுவம் உறுதிசெய்யவில்லை. (a)
21 minute ago
32 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
51 minute ago
1 hours ago