Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் ‘ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை‘ எனக் கூறி அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஈரான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஹிஜாப்பினைத் தீயிட்டு எரித்தும், தலைமுடியை வெட்டியும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் இப் போராட்டங்களின் போது பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டத் தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேல் இப்போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக போராட்டக்காரர்களுக்கு சார்பாக ஈரான் அரசு செவிசாய்த்துள்ளது.
அந்த வகையில், இஸ்லாமிய மத சட்டங்களைக் கண்காணிக்கும் 'அறநெறி பொலிஸ்' பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.
இப்பொலிஸ் பிரிவு நிரந்தரமாக கலைக்கப்படதா? அல்லது இந்த நடவடிக்கை தற்காலிகமானதா? என்று அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும், அறநெறி பொலிஸ் பிரிவு கலைப்பு ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago