Freelancer / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் இருந்து, சனிக்கிழமை (19) ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என, இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் செய்தியொன்றை வெளியிட்டு்கால்.
அந்த செய்தியில், பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், “இன்று என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
“இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரை தொடர்வதிலிருந்து தடுக்காது.
“ஈரானுக்கும் அதன் தீமையின் அச்சில் உள்ள அதன் பினாமிகளுக்கும் சொல்கிறேன், இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம்.
“எங்கள் பிணைக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவோம். நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம்.
“நமது போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago