Editorial / 2018 நவம்பர் 15 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

யேமனின் முக்கிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டோவைக் கைப்பற்றுவதற்கான, அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளின் நடவடிக்கைகள், இடைநிறுத்தத்துக்கு வந்தன போன்ற நிலைமை அங்கு காணப்படுகிறது என, யேமன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவீடனில் இடம்பெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, யேமனில் காயமடைந்த எதிரணிப் போராளிகளில் காயமடைந்தோரை வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்குவதாக, அரசாங்கத் தரப்பு உறுதி வழங்கியுள்ளது என, ஐக்கிய இராச்சியம் தெரிவித்த பின்னணியிலேயே, இந்நிலைமை உருவாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு மத்தியில், இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஐக்கிய நாடுகளும் ஏனைய அமைப்புகளும் பல நாடுகளும், யேமன் அரசாங்கத்துக்கும் அவ்வரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படும் சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணிக்கும், தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
இவற்றுக்கு மத்தியிலேயே, இம்மாத இறுதியில், சுவீடனில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகள் ஓய்ந்துள்ள நிலையில், ஹொடெய்டா துறைமுகத்துக்குச் செல்லும் வாயில் பகுதியில், போராளிகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு வருகின்றன என, துறைமுகத்தின் பணியாளர்கள், நேற்று (14) தெரிவித்தனர்.
துறைமுகத்தின் மூன்று வாயில்களில், இரண்டு நுழைவாயில்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன எனவும், ஒரேயொரு வாயிலில் மாத்திரம், இதுவரை புதைக்கப்படவில்லை எனவும், அப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago