Freelancer / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் ஹொக் சான் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹோட்டலில் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஹோட்டலின் 5வது மாடியில் உள்ள அறையில், திங்கட்கிழமை (30) இரவு 10 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமத்தித்தனர். ஆனால், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025