2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'கருத்தை வாபஸ் பெற மாட்டேன்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு, அக்கட்சியால் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பணமும் 80 ஆசனங்களும் வழங்கப்பட முன்வரப்பட்டது என்ற கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை என, ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் கருத்துத் தொடர்பில், மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கோரி, தி.மு.கவிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய வைகோ, தி.மு.கவிடமிருந்து நோட்டீஸ் கிடைப்பது இதுவொன்றும் புதிதன்று எனக் குறிப்பிட்டார். அத்தோடு, தனக்கெதிராக நோட்டீஸ் அனுப்புவதற்கு, தி.மு.க தலைவர் மு. கருணாநிதி எண்ணியிருக்க மாட்டார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, வைகோ தெரிவித்த மற்றொரு கருத்துத் தொடர்பில், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவரான தமிழினி சௌந்தரராஜனும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்கு விஜயகாந்தைத் தம்வசம் இழுக்க, அவருக்கு அமைச்சுப் பதவிகளை பா.ஜ.க வழங்க முன்வந்ததாக, வைகோ தெரிவித்திருந்தார். இதற்கே, கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .