Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் தனது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து உள்ளார். அவரது தியாகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள் பாராட்டி உள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்கிறார். அவரின் இந்தக் குறைபாடு எத்தனையோ குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கிறது.
அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லீட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.
2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார்.
2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago