Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Jean Bickenton. இவர் இதற்கு முன்னர் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் தனது 100 ஆவது பிறந்தநாளை ஜீன் அண்மையில் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் திடீரெனக் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸார் ஜீனை கைது செய்த சம்பம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து.
எனினும் இதற்கான இதன் உண்மைக் காரணம் மிகவும் வேடிக்கையான ஒன்று தான்.
இராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ள ஜீனுக்கு பொலிஸார் தன்னைக் கைது செய்ய வேண்டு என்ற ஆசை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் , ஜீனுடைய விருப்பத்தை அவரது 100 ஆவது பிறந்தநாளில், மிகவும் வேடிக்கையான முறையில் விக்டோரியா பொலிஸார் நிறைவேற்றியுள்ளனர்.
அதாவது இளம் பொலிஸார் சிலர் சைரன்களை அலறவிட்ட படி, மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரைக் கைது செய்வது போல சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் ஜீனுடன் பொலிஸார் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
இது பற்றி பேசிய ஜீன், "இதுதான் என் சிறந்த பிறந்தநாள் ஆக அமைந்தது. அவர்கள் அனைவரும் என்னை மிகவும் மென்மையாக நடத்தினார்கள். மிக்க நன்றி" எனக் கூறி உள்ளார்.
51 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago