Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 22 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு கொண்டதாகப் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. இருப்பினும், தான் செய்ததை நினைத்து வருந்துவதாகச் சொல்லும் அவர், இந்த தவறை மற்றவர்கள் யாரும் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
பிரிட்டன் நாட்டில் தெற்கு லண்டனைச் சேர்ந்தவர் 31 வயதான பென்னி ஜேம்ஸ். இவர் கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பெண்களுடன் இருந்துள்ளார்.
இதை அவரே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இதுபோல தான் ஏகப்பட்ட பெண்களுடன் தனிமையில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். முன்பு இது உற்சாகமாக இருந்தது போலவே தோன்றியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், காலம் செல்லச் செல்ல அது ஒருவித வெறுப்பைக் கொடுத்துள்ளது. இப்போது அது தனிமை மற்றும் சோகத்தையே அளிப்பதாக பென்னி ஜேம்ஸ் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக பென்னி மேலும் கூறுகையில்,
"இது போலச் செய்வது உங்களை நல்ல இடத்திற்குக் கொண்டு செல்லாது, உங்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிடும். அதன் பிறகு உங்களால் இயல்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவே முடியாது. இயல்பான வாழ்க்கை வாழ்வது கூட கடினமாகிவிடும். இறுதியில் நீங்கள் தனிமையாகவும் மன அழுத்தத்துடனும் இருக்க வேண்டி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அர்த்தமற்ற வாழ்க்கை ஏற்படுத்தும் வெறுமையை ஏற்படும் வெறுமையைப் பணம் மற்றும் புகழால் நிரப்ப முடியாது என்கிறார் பென்னி ஜேம்ஸ். கன்டெண்ட் கிரியேட்டராக இருந்துள்ளார். அப்போது வாரம் ஒரு முறை எனப் பல பெண்களைச் சந்தித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏகப்பட்ட பெண்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அப்போது இருந்த வாழ்க்கை ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக முதலில் நினைத்தாலும் இப்போது அதை நினைத்தாலே கவலை ஏற்படுவதாகக் கூறுகிறார். அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் போராடி வருவதாகவும் சில சமயங்களில் வீட்டை விட்டு வெளியேறக்கூட முடியாத நிலையும் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.. ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகிவிட்டாராம்.
இப்போது தான் மெல்ல மீண்டும் ஒரு பார்ட்னர் உடன் செட்டிலாகி இருக்கிறார். மேலும் மது அருந்துவதையும் விட்டுவிட்டார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் பார்ட்னர் உடன் அதிக நேரம் செலவழித்தார். அது அவரது தவறான முடிவுகளைக் கைவிட உதவி இருக்கிறது. இதன் காரணமாகவே மற்றவர்கள் யாரும் இந்தப் பாதைக்குப் போக வேண்டாம் என அவர் சொல்கிறார். R
20 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago