Mayu / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்பிரிக்க நாட்டின் கானாவின் தலைநகரம் அக்ராவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு எனும் 63 வயது மத போதகர். நுங்குவாவின் பூர்வக்குடி மக்களுக்கு மதகுருமாராக இருந்து வருகிறார்.
இவர் சமய சடங்குகளை முன்னிறுத்தி 12 வயது சிறுமியை மத போதகர் சுரு திருமணம் செய்துள்ளார்.

திரமுணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதால் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததோடு கானா அரசு உடனடியாக தலையிட்டு திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பினர்.
மறுபுறம், பாரம்பரிய முறைப்படி இத்திருமண நிகழ்வு நடந்திருப்பதால் அதில் தலையிட மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லைஎன்று வேறு சில மதத்தலைவர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்தது வருகின்றனர் .
தற்போது மணமுடிக்கப்பட்ட சிறுமிக்கு 6 வயது ஆன போதே இத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுமிக்குக் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இது சமய சடங்கு சார்ந்த திருமணமே அன்றி வேறில்லை என்று சிலர் தெரிவித்தனர். ஆனால், விசாரணையில் அச்சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
17 minute ago
26 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
36 minute ago
2 hours ago