Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத் தரவுகளில் கடந்த மூன்று மாதங்களில் 132 கிராமங்களில் ஒரு பெண் பிள்ளை கூட பிறக்காமை வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, வட இந்திய மாநிலமான உத்தரகாண்டிலுள்ள அதிகாரிகள் பால் தெரிவு கருக்கலைப்பு நடாத்தப்பட்டதா என விசாரிக்கின்றனர்.
கடந்த வாரம் வெளிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தரவின்படி, உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தராக்ஷி மாவட்டத்திலுள்ள 500 கிராமங்களில் 947 பிள்ளைகள் பிறந்துள்ளன. இதில், மேற்குறிப்பிட்ட 132 கிராமங்களின் 200 பிறப்புகளில் எந்தவொரு பிள்ளையும் பெண் பிள்ளையாகக் காணப்பட்டிருக்கவில்லை.
அதுவும் குறித்த தரவின்படி அந்த மூன்று மாதங்களில் பிறந்த 468 ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக 479 பெண் குழந்தைகள் பிறந்தபோதும் குறித்த 132 கிராமங்களில் எந்தவொரு பெண் பிள்ளையும் பிறந்திருக்கவில்லை.
இந்நிலையில், 132 கிராமங்களையும் சிவப்பு வலயமாக உத்தராக்ஷி மாவட்ட நிர்வாகம் அடையாளப்படுத்தியுள்ளதுடன், 25 அதிகாரிகளைக் கொண்ட அணியொன்று குறித்த விடயத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த 132 கிராமங்களில் 82 உயர் பிறப்புவீதத்தை காண்பிப்பதால் அக்கிராமங்களை முதலில் விசாரணை செய்யவுள்ளதாக உத்தராக்ஷி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அஷிஷ் சோஹான் தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிலையில் ஏதாவது பெண் கருக்கொலை குறித்த கிராமங்களில் இடம்பெற்றுள்ளதாக என தங்களால் உறுதிப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கையொன்றை தான் வினவியுள்ளதாக உத்தரகாண்ட்டின் பெண்கள் மற்றும் சிறுவர் நலன்களுக்கான அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளதுடன், ஏதாவது வலிந்த கருச்சிதைவுகள் அல்லது கருக்கலைப்புகள் அங்கு இடம்பெற்றதா என அதிகாரிகள் அணியொன்று ஆராய்வதாகத் தெரிவித்துள்ளார்.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago