Editorial / 2019 மே 02 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவோயிஸ்ட் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் குண்டுத் தாக்குதலொன்றில், இந்திய உயர் ரக கொமாண்டோக்கள் 16 பேர் நேற்று (01) கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னைய தாக்குதலொன்றை ஆராய தனியார் வாகனமொன்றில் பயணித்த கொமாண்டோக்கள் அணியொன்றையே மாவோயிஸ்ட்கள் தாக்கியதாகவும், தற்போது வரையில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்ராவிலுள்ள பொலிஸ் தலைமையகத்திலுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு மீட்பு, போர் நடவடிக்கைகளுக்காக மேலதிக அணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத குறித்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கட்ஷிறோலி பிராந்தியத்தில் நடைபெற்ற குறித்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக கட்ஷிறோலி பொலிஸ் அதிகாரி பிரஷான்ட் டுட்டே தெரிவித்துள்ளார்.
கட்ஷிறோலியில் இன்று மதியம் 12.30க்கு, 30க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மாவோயிஸ்ட்கள் தீ வைத்ததாகவும், இன்னொரு குண்டு வெடிப்பில் 15 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், சரியான சேதத்தை அளவிடுவதற்கு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பிரஷான்ட் டுட்டே கூறியுள்ளார்.
இந்தியாவின் மத்திய மாநிலமான சட்டீஸ்கரிலுள்ள கிராமமொன்றில், பொலிஸார் மீது கடந்த வாரயிறுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மாவோயிஸ்ட்கள், பொலிஸ் அதிகாரிகள் இருவரைக் கொன்றதுடன், கிராமத்தவரொருவரை காயப்படுத்தியிருந்ததாக பி.டி.ஐ தெரிவித்திருந்தது.
இதேவேளை, சட்டீஸ்கரில் கடந்த மாத ஆரம்பத்தில் அரசியல் பேரணியொன்றை வீதியோரக் குண்டொன்று தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருந்தனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago