2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

1984 கலவரம்: ஒருவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், சீக்கியர்களுக்கு எதிராக, 1984ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாரிய கலவரம் தொடர்பில், இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட இந்திய நீதிமன்றமொன்று, அவர்களில் ஒருவருக்கு, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியது. மற்றையவருக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது மெய்ப்பாதுகாவலரான சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த வன்முறைகள், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமாக, டெல்லியில் இவ்வன்முறைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வன்முறைகளின் காரணமாக, சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர் என, உத்தியோகபூர்வத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர் என, ஏனைய தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு மத்தியில், இந்த வன்முறைகள் தொடர்பான விசேட விசாரணையொன்று 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதில், இருவரைக் கொன்ற குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கே, டெல்லி நீதிமன்றமொன்றால், நேற்று முன்தினம் (20), மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி, 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர், இக்கலவரங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட முதலாவது தண்டனையாக இது அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X