2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

1984 கலவரம்: காங்கிரஸ் அரசியல்வாதிக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், சீக்கியர்கள் மீது 1984ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான சஜ்ஜன் குமார், குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, டெல்லி நீதிமன்றமொன்று, நேற்று (17) வழங்கியது.

சீக்கியர்களைக் கொல்வதற்காகத் தூண்டினார் என்ற விடயத்தில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வன்முறைகள் தொடர்பாகக் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முக்கியஸ்தராக இவர் கருதப்படுகிறது.

இவர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், “அரசியல் ஆதரவு நிலை” காரணமாகவே அவர் இதுவரை தப்பியிருந்தார் என, தனது தீர்ப்பின் போது, நீதிபதி விமர்சித்தார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், நகரத்தை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இவ்வாண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கிடையில் சரணடையுமாறும் உத்தரவிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், டெல்லி மாநகரக் கூட்டுத் தாபனத்துக்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X