Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய இரண்டு மகள்மார்களையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவ்விரு யுவதிகளின் தந்தைக்கு 702 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபபட்டுள்ளதுடன் 234 கசையடிகளும் வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மலேசிய பிரஜைக்கே அந்நாட்டு நீதிமன்றம் மேற்கண்ட தண்டனையை அண்மையில் விதித்திருந்தது.
53 வயதான அந்த நபர், அவருடைய 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகiயும் 2018 முதல் 2023 வரையிலான காலப்பகுதிக்குள் சுமார் 30 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
குற்றவாளி தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இரண்டு வீடுகளில் வைத்து அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டது. அவ்விருவரையும் அவர் கர்ப்பமாக்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சந்தேகநபரின் சட்டத்தரணி, தளர்வான தண்டனையை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரியிருந்த போதும், அந்த மனுவை பரிசீலிக்காது, வழங்கக்கூடிய அதியுட்சபட்ச தண்டனையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையிலேயே மேற்கண்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Thavamani ranjith Sunday, 20 August 2023 03:21 PM
மிகச் சிறந்த தண்டனை, இது போன்ற குற்றங்களை அப்போது தான் ஒழிக்க முடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago