Mayu / 2024 ஜூன் 03 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் ஜனாதிபதியாக தொழில்அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.
55 வயதான டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக கடந்த 1980 ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
30 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
57 minute ago