2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை

Ilango Bharathy   / 2023 மே 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'2 வயதான  குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் வடகொரியாவில் இடம்பெற்றுள்ளது.

வடகொரியாவில், அண்மையில் பைபிள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு மாதக்  கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ”வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .