2026 மே 14, வியாழக்கிழமை

200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொட்டையடித்ததால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 26 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாக 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்றுதிரண்டு, தலையை மொட்டை அடித்த சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாத் தொற்றுப் பரவலானது புதிய உச்சத்தை எட்டி வருகின்றது.

இந்நிலையில் சீனப் புத்தாண்டு வர உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்கும் விதமாக மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

கடை வாடகையைக் கூட செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்த 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அந்நாட்டு அரசைக் கண்டித்து மொட்டையடித்துள்ளனர்.

அத்துடன் அரசாங்கம் தமக்கு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தற்போது விதிக்கப்பட்ட  ஊரடங்கையும் தளர்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .