Editorial / 2019 ஜூலை 26 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 ஆண்டுகால இடைவேளைக்குப் பின்னர், மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அட்டோனி ஜெனரல் வில்லியம் பார், ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு, சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்,
விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள ஐந்து கைதிகளும், குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து கைதிகளுக்காக மரண தண்டனை, முறையே வரும் டிசெம்பர், அடுத்தாண்டு ஜனவரி மாதங்களில் நிறைவேற்றுவதற்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.
"இருவேறு கட்சிகளின் நிர்வாகத்தின் போதும், மிகவும் மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது" என்று வில்லியம் பார் மேலும் தெரிவித்துள்ளார்.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago