2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர்.

அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார். இப்படையினரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2500 பேர் கொண்ட ஒரு படையாக அமையாவும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க விமானங்களுக்கும் அவுஸ்திரேலிய தளங்கள் திறக்கப்படும் என ஜூலியா கில்லார்ட் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், மனிதாபிமான மற்றும் அனர்த்த தேவைகளுக்கும் பாதுகாப்புச் சவால்களும் அமெரிக்கா மேலும் சிறப்பாக  பதிலளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவிடும் என்றார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை பேணுவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும். இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கும் சிறிய நாடுகளுக்கு உதவி வழங்குவதற்கும் இது வழியமைக்கும்.  இதனால் அந்நாடுகள் நெருக்கடிகளின்போது விரைவாக செயற்படுவற்கு முடியும் என ஒபாமா கூறினார்.

சீனா எதிர்ப்பு

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பை சீனா எதிர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்வது பொருத்தமற்றது எனவும் இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்குள்  கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் இராணுவ சக்திக்கு பதிலளிப்பதற்காகவா இந்த ஏற்பாடு என கேட்கப்பட்டபோது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேரடியாக பதிலளிக்கவில்லை.

"'சீனா விதிகளின்படி செயற்படும்போது அது அனைவருக்கும் வெற்றியளிக்கும் சூழ்நிலையாக இருக்கும். அவ்வாறில்லாத சமயங்களில் சீனா ஒழுங்கில் இருக்க வேண்டும்  என்ற செய்தியை பெய்ஜிங்கிற்கு அமெரிக்கா அனுப்பும்" என ஒபாமா கூறினார்.
 


  Comments - 0

  • Mohammed Hiraz Thursday, 17 November 2011 07:41 AM

    அப்போ சீனாவுடன் அமெரிக்கா போர் செய்யும் இடத்து முதலில் சீனாவின் கடும் சினத்திற்கு பழியாகி அழிந்தொழிந்து போகபோகும் முதல் நாடு அவுஸ்திரேலியாவாக இருக்க போகிறது. பொல்லை கொடுத்து அடிவாங்க போகிறவர்களுக்கு இது தேவைதான். மெலும் இவ்வளவு பாரிய அச்சுறுத்தல் உள்ள அவுஸ்திரேலியாவில் பொது நலவாயபோட்டிகள் நடப்பதும் பாரிய சந்தேகம்தான் நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரிக்கும் இடத்து பொதுநலவாய போட்டிகள் நடடத்தும் வாய்பை அவுஸ்திரேலியா இழக்க கூடும். அவ்வாறே நடக்க வேண்டும் அந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு மீண்டும் என் தேசத்திற்கு கிடைத்து தேசத்தின் அவமானம் துடைக்கப்பட வேண்டும் என்பதே எனது பிராத்தனைகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .