2021 மே 08, சனிக்கிழமை

சாகச பயிற்சியில் ஈடுபட்ட விமானம் விபத்து; ஐவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியான குயின்ஸ்லாந்து  விமானதளத்தில் சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

கபூல்ச்சர் விமான நிலையத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற இவ்விபத்தின்போது, 'செஸ்னா 206' என்ற இவ்விமானம் விமான ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் கீழே விழுந்து சுமார் 10 நிமிடங்கள்வரையில் தீப்பிடித்து எரிந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது விமானி 02 விமான பயற்சியாளர்கள் மற்றும் இருவர்  மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து விமான ஓடுபாதையில் இடம்பெற்றதாக சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தைத் தொடர்ந்து குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X