2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

24 மணிநேரத்தில் 14 பேர் பலி

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்காளதேஷில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் டெங்கு தாக்கத்தால் 804 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்புக்கு நேற்று காலை வரை, கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 281 பேர் உயிரிழந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையாக இருந்தது. 

அதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் 179 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகளவாகவுள்ளது.

இந்த ஆண்டில் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 562 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில், 1,53,428 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ந்து டெங்கு பரவல் காணப்படுகிறது.

நாடு முழுவதும் டெங்கு நோயாளிகள் 10,330 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 

இதற்கமைய டாக்காவில் மட்டும் 4,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .