Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவரின் காருக்குள் மர்ம நபரொருவர் மூன்று நாட்களாக நிர்வாணமாக இருந்த விநோத சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கொலம்பியா நகரைச் சேர்ந்த பென்தனி கோகர்(Bethany Coker )என்பவரின் காரிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்” கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது கார் இருக்கையில் சேறு படிந்த காலடித் தடங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அதன் பின்னர் அடிக்கடி தன்னுடைய வீட்டுப் பகுதியில் மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதைத் உணர்ந்ததாகவும், குறிப்பாக அவரது காரின் பின்புறத்தில் இருந்து அடிக்கடி சத்தம் வருவதாகவும், எனினும் அதனை திறக்கப்பயந்து பொலிஸாரிடம் தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸாரின் உதவியுடன் அவரது காரைச் சோதனை செய்த போது , காரின் பிற்பகுதியில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளாகவும், அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மனநலம் குன்றியவர் எனவும், காணாமற் போனவர்களின் பட்டியலில் தேடப்பட்டு வருபவர் எனவும், 3 நாட்களாக அக்காரின் பிற்பகுதியில் உறங்கி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 Aug 2025
23 Aug 2025