Editorial / 2025 ஜூன் 26 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் ஈரான் இடையே எப்போதும் மோதல் இருந்தே வந்துள்ளது. ஈரான் நாட்டில் அரசிலேயே கூட பல்வேறு நிலைகளில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த மோதலில் முதல் நாளே ஈரானின் டாப் தலைவர்களை இஸ்ரேலால் துல்லியமாகக் கொல்ல முடிந்தது. இதற்கிடையே இஸ்ரேல் உளவாளிகள் எனச் சொல்லி 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக மோதல் தொடர்ந்து வந்தது. ஒரு வழியாக நேற்று தான் இரு நாட்டு மோதல் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுமே போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதனால் மெல்ல அமைதி திரும்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பல மணி நேரமாக எந்தவொரு தாக்குதலும் இல்லாமலேயே இருக்கிறது.
இதற்கிடையே ஈரான் நாட்டில் இப்போது மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்காக உளவு பார்த்ததாக சொல்லி 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் மிஸான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் தொடர்ந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஒரு வழியாக நேற்றுதான் முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்த மறுநாளே ஈரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தூக்கிலிடப்பட்ட மூவரும் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து பணியாற்றியதாகவும் மிஸான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய புள்ளி ஒருவரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் யார் அந்த முக்கிய புள்ளி.. அவர் எப்போது கொல்லப்பட்டார் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. இது தவிர இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நூர்நியூஸ் தெரிவித்துள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago