Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போரில், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் வட அத்லாண்டின் ஒப்பந்த நிறுவனம் (நேட்டோ) தலைமையிலான படைகளால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளின் பாரிய அதிகரிப்பொன்று உள்ளடங்கலாக குறைந்தது 3,812 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் கொல்லப்பட்டுள்ளதாக அல்லது காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவி நடவடிக்கை அறிக்கையொன்று இன்று (30) வெளிப்படுத்தியுள்ளது.
வீட்டில் தயாரிக்கப்படும் குண்டுகள், வான் தாக்குதல்களையடுத்து தாக்குதல்கள், மோதல்கள் மேலும் பொதுமக்கள் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவி நடவடிக்கை கூறியுள்ளது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள் 531 ஆப்கானிஸ்தானியர்களைக் கொன்றுள்ளதுடன், 1,437 பேரைக் காயமடையச் செய்துள்ளனர்.
இதுதவிர, அரசாங்க அதிகாரிகள், பழங்குடியினத் தலைவர்கள், தொண்டுப் பணியாளர்கள், மத போதகர்கள் உள்ளடங்கலாக 985 பொதுமக்களை தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு வேண்டுமென்றே இலக்கு வைத்ததாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவி நடவடிக்கையின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள் 717 ஆப்கானிஸ்தானியர்களைக் கொன்றுள்ளதுடன், 680 பேரை காயமடையச் செய்ததாக மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவி நடவடிக்கையின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கடந்தாண்டின் முதல் ஆறு மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டு ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தாலிபானுக்கும், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளுக்குமான பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தத்தை இவ்வாண்டு செப்டெம்பர் முதலாவது திகதிக்கு அடைவதை ஐக்கிய அமெரிக்க பேரம்பேசுநர்கள் இலக்காகக் கொண்ட முக்கிய கட்டத்துக்குள் நுழைகின்ற நிலையிலேயே மேற்குறிப்பிட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago