S.Renuka / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் , பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, அங்கு பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள பலுச் இன மக்களின் ஆயுதக் குழுவான பி.எல்.ஏ. எனப்படும் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பி.எல்.ஏ, வீரர்கள் பலுசிஸ்தானில் மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளனர் தொடர்ந்து நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வன்முறை நீடிக்கிறது. 'ஆப்பரேஷன் ஹெரோப்' இரண்டாம் கட்டம் என்ற பெயரில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் வாகனங்கள், சிறைகள், அரசு அலுவலகங்களை குறிவைத்து துப்பாக்கி, வெடிகுண்டு தாக்குதல்கள் நட த்தப்பட்டுள்ளன.
அத்துடன், பெண்கள் உட்பட பதினொன்று பேர் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பாகிஸ்தான் இராணுவம், பொலிஸ், சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பி.எல்.ஏ. வீரர்கள் அறிவித்துள்ளனர். தங்கள் அமைப்பைச் சேர்ந்த பதினெட்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. தாக்குதலை முறியடிக்க இராணுவம், பொலிஸ் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதில் 145 பி.எல்.ஏ. வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருதரப்பு இடையே நடந்த சண்டையில் பொதுமக்களில் ஐந்து பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 31 பேரும், பாதுகாப்புப்படை வீரர்கள் 17 பேரும் உயிரிழந்துள்ளதாக இராணுவ தரப்பு கூறியுள்ளது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago