Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் வடக்குப் பகுதியில், நேற்று முன்தினம் (16) பின்னிரவில் ஏற்பட்ட பலமான வெடிப்புக் காரணமாக, 42 பேர் காயமடைந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டுப் பொலிஸார், நேற்று (17) தெரிவித்தனர். இந்த வெடிப்புக் காரணமாக, குறித்த வெடிப்பு இடம்பெற்ற உணவகம் மாத்திரமன்றி, அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்திருந்தன.
சப்போரோ என்ற குறித்த நகரத்தில் இடம்பெற்ற குறித்த வெடிப்புக் காரணமாக, பாரிய தீ ஏற்பட்டதுடன், அருகிலிருந்த கட்டடங்கள் சில, பகுதியளவில் சரிந்திருந்தன.
என்ன காரணத்துக்காக இவ்வெடிப்பு இடம்பெற்றது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், ஆனால், எரிபொருள் வாயு சிலின்டர் வெடித்தமையின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த பலர், உணவகக் கட்டடத்தின் முதலாவது மாடியில் காணப்பட்டனர் எனவும், அப்போது அவர்கள், எரிவாயுக் கசிவை முகர்ந்தனர் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
55 minute ago