Editorial / 2018 ஜூன் 25 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் சிரேஷ்ட தலைவர்கள் உட்பட 45 உறுப்பினர்களை, ஈராக் படையினர் கொன்றுள்ளனர் என, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர்
சிரியாவின் ஹாஜின் நகரில், மூன்று வீடுகள் இணைந்து காணப்பட்ட பகுதி மீதே, இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் சிரேஷ்ட தலைவர்கள், முக்கியமான சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
கொல்லப்பட்டவர்களில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் போருக்கான பிரதியமைச்சர், ஊடகப் பொறுப்பாளர், பொலிஸ் பொறுப்பாளர், அதன் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் தனிப்பட்ட உதவியாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என, ஈராக் தெரிவிக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போரில், சிரிய அரசாங்கத்துக்கு, ஈராக் தொடர்ந்தும் உதவி வந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைக்கு அண்மையிலேயே தற்போது அதிகமாகக் காணப்படுவதால், தாக்குதல்களை நடத்துவதற்கு, ஈராக்குக்கு அதிக வாய்ப்புகளையும் இது கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே இழப்புகளைச் சந்தித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு, மேலும் முக்கியமான இழப்பாக இது அமைந்தது. சிரியாவிலும் ஈராக்கிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் உரிமை கோரப்பட்ட பகுதிகளில் 98 சதவீதமானவற்றை, அக்குழு இழந்துள்ளது என, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, கடந்தாண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025