2025 நவம்பர் 05, புதன்கிழமை

5ஆம் கட்ட தேர்தல்

Editorial   / 2019 மே 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட 51 நாடாளுமன்றத் தொகுதிகளில், நேற்று (06) விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத்துக்கு, கடந்த மாதம் 11ஆம் திகதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11ஆம் திகதி 91 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23ஆம் திகதி 116 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் திகதி 71 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடை பெற்றது.

நேற்று (06), 5ஆம் கட்டமாக, உத்தர பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்காளம் (7), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களிலுள்ள மொத்தம் 51 தொகுதிகளிலும் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு செய்வதற்காக, 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 16.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

நேற்றுடன் 424 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்து விடுகிறது. இன்னும் 118 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6ஆவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி 8 மாநிலங்களிலுள்ள 59 தொகுதிகளுக்கு 7ஆவது கட்ட இறுதி தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் வாக்குப்பதிவு அனைத்தும் நிறைவடைந்து, 23ஆம் திகதி. வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். இந்தமுறை, ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி சரி பார்க்க வேண்டியதிருப்பதால் பிற்பகலில் தான் முடிவுகள் தெரியத் தொடங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X