2025 மே 17, சனிக்கிழமை

50,000 பேரைக் காவு வாங்கிய நிலநடுக்கம்; 200 பேர் கைது

Ilango Bharathy   / 2023 மார்ச் 01 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கி- சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலநடுக்கத்தால் இருநாடுகளையும் சேர்ந்த  சுமார்  50,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும்  இடம்பெற்று வருகின்றன.

அதேசமயம் 1,60,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

 குறிப்பாக துருக்கியில் மாத்திரம்  5,700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியைச் சேர்ந்த கட்டிடவியல் வல்லுநர்களை , பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக நாட்டின் கட்டுமான விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமானப்  பணிகளை மேற்கொண்டமையினாலேயே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

 மேலும் இது தொடர்பாக 600க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும்,இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .