Amirthapriya / 2018 ஜூன் 18 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பாவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய குடியேற்றவாசிகளின் படகு, இறுதியாக ஸ்பெய்னில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதில் காணப்பட்ட 630 குடியேற்றவாசிகளும், ஸ்பெய்னில் நேற்று (17) தரையிறங்கினர்.
ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களைப் பிரதானமாகக் கொண்ட இந்தப் படகு, இத்தாலிக்கும் மோல்ட்டாவுக்கும் இடையில் வைத்துக் காப்பாற்றப்பட்டது. ஆனால், அப்படகை ஏற்பதற்கு, இரு நாடுகளுமே மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், சுமார் ஒரு வாரகாலமாக, பதற்றமான நிலையெ காணப்பட்டது.
இந்நிலையிலேயே, ஸ்பெய்னின் தென்கிழக்கு நகரமான வலென்சியாவில், இப்படகு வந்து சேர்ந்தது. இத்தாலியைச் சேர்ந்த கரையோரக் காவல்படையின் இரண்டு படகுகள், அப்படகு 1,500 கிலோமீற்றர் பயணம் செய்வதற்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தன.
ஸ்பெய்னை வந்தடைந்த குடியேற்றவாசிகளை, செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் 1,000 பேர், மொழிபெயர்ப்பாளர்கள் 470 பேர் உட்பட மொத்தமாக 2,000க்கும் மேற்பட்டவர்கள் வரவேற்றனர்.
குடியேற்றவாசிகளுள் வளர்ந்த ஆண்கள் 450 பேரும், 7 கர்ப்பிணிகள் உட்பட 80 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர். அதேபோல், 13 வயதுக்குட்பட்ட 11 பேரும், மேலும் 89 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களுள் பெரும்பாலானோர், ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் உள்ளடங்கியிருந்தனர்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025