2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

8ஆவது மாடிச் சன்னல் விளிம்பில் நின்ற பெண்

Editorial   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் சிங்கபூரில் இடம்பெற்றுள்ளது.

சிங்கபூர் கிளமெண்டி ஸ்ட்ரீட் 13, புளோக் 118இன் 8ஆவது மாடியிலேயே இந்த சம்பவம் நடந்தது.

  துணி காய வைக்கும் பகுதியின் சன்னல் விளிம்பில் பெண் நிற்பதைக் காணமுடிகிறது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வீட்டுக்குள்ளே இருந்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். கீழ் மாடியில் இருக்கும் வீட்டிலும் அதிகாரிகள் இருந்தனர்.

முன்னெச்சரிக்கையாக காற்றுப்பையும் (airbag) தயார்செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சன்னல் விளிம்பில் இருந்த 24 வயதுப் பெண் பின்னர் காப்பாற்றப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X