2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

சின்ன உலக முடிவில் குளவிகள் விரட்டி, ​விரட்டி கொட்டியுள்ளது

Editorial   / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமையில் சின்ன உலக முடிவை பார்க்க, மல்வானை பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதில் ஒன்பது பேர் காயமடைந்து லுணுகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மடுல்சீமை ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

மல்வானை பகுதியைச் சேர்ந்த பத்து இளைஞர்கள் குழு, சின்ன உலக முடிவை பார்க்க வந்து  அங்கு கூடாரம் அமைத்து சனிக்கிழமை (04) இரவைக் கழித்திருந்தனர். அவர்கள் உலகின் சின்ன உலக முடிவை, ஞாயிற்றுக்கிழமை (05) பார்க்கச் சென்றபோது, ​​அங்கிருந்த குளவிக்கூடு திடீரென களைந்து அவர்களை கொட்டத் தொடங்கியது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   .

பின்னர், குளவி தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஓடிவிட்டனர், குளவிகள் அவர்களை விரட்டிச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மடுல்சீமை பொலிஸார் அதிகாரிகளுடன் சேர்ந்து, அப்பகுதி மக்கள் பின்னர் குளவிகளை விரட்ட புகையை போட்டுள்ளனர். குளவிகளை அவ்விடத்தில் இருந்து பறந்து​ சென்றதன் பின்னர் காயமடைந்தவர்களை லுணுகலை மருத்துவமனையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X