2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

அந்தரங்க உறுப்புக்குள் மனைவி வைத்திருந்த பொருள்: கணவருக்கு தீவிர சிகிச்சை

Editorial   / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், தௌலத்பூர் கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தனது கணவன் கள்ளத்தனத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்த மனைவி, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் துண்டித்து வீசி விட்டார்.

இந்தச் சம்பவம்  அக்டோபர் (04) இரவு நடந்தது. பாதிக்கப்பட்ட கணவர் ராஜு (வயது 32) தற்போது உயிருக்காக போராடி வருகிறார். 

தௌலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ராஜு மற்றும் அவரது மனைவி நேஹா (வயது 28) திருமணமாகி ஐந்து ஆண்டுகளானது. இருவருக்கும் 4 வயது சிறுவன் உள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, ராஜு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று திரும்புவதில்லை என்பதால், நேஹாவுக்கு அவரது கள்ளத்தனத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகம் கடந்த சில மாதங்களாக வலுக்கியது.சனிக்கிழமை (04) இரவு ராஜு தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கோபத்தில் கொதித்த நேஹா அவரது பக்கத்தில் வந்து, மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை முழுமையாக துண்டித்தார்.

உயிருக்கு போராடி கதறிய ராஜுவின் அழைப்புக் குரலை கேட்டு அவரது தந்தை மஹிபால் (வயது 60) அறைக்கு ஓடினார். ரத்தம் கசிந்து கிடந்த மகனைப் பார்த்து அதிர்ந்த மஹிபால் உடனடியாக அவரை தனது பைக் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் ராஜுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் பின், சிகிச்சைக்காக மோரடாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, ராஜுவின் உடல்நிலை தீவிரமானது. அதிக ரத்த இழப்பு காரணமாக அவர் ஐ.சி.யூவில் (Intensive Care Unit) வைக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் தப்ப வாய்ப்பு 50%க்கும் குறைவானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தெரிந்து கொண்ட சம்பல் பொலிஸ், உடனடியாக தௌலத்பூர் சென்று நேஹாவை கைது செய்தது. நேஹா தனது சொந்த வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

அவர் பொலிஸிடம், "அவர் என்னை ஏமாற்றினார். கள்ளத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். என்னால் தாங்க முடியவில்லை. முதலில் என்னுடைய மர்ம உறுப்பின் உள்ளே சிறிய கூர்மையான கத்தியை ஒன்றை மறைத்து வைத்திருந்தேன். உறவின் போது அவருக்கு காயம் ஏற்படும் என்று நினைத்தேன். ஆனால், பயம் காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். அதன் பிறகு தான் இந்த திட்டத்தை அரங்கேற்றினேன்.." என்று கூறியதாக தெரிகிறது. பொலிஸ் சோதனையில், கத்தி மற்றும் ரத்தமுள்ள துணிகள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சம்பவத்திற்கு கொலை முயற்சி, காயம ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X